சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கான பணத்தை வீண் விரயம் செய்ததாக கூறப்படும் 10 முன்னாள் அரசு நிறுவனத் தலைவர்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தக் குழுவில் நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதானி ஒருவரும், 4 முன்னாள் நிறுவனத் தலைவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முன்னாள் நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதானி கடந்த காலங்களில் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றுள்ளார்.
அரசு நிறுவனத் தலைவர்கள்
இதற்காக நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் நெறிமுறை அலுவலகத்திலிருந்து வரம்பில்லாமல் நிதியை பயன்படுத்தியுள்ளார் எனவும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அறிவிப்பை தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதானி சர்வதேச அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பணிகளுக்கான அழைப்பிதழ்களை பெறுவதில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் விரும்பியபடி வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பிரதானி நாடாளுமன்ற வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்ற முறைப்பாட்டையும் புலனாய்வு திணைக்களம் விசாரணை செய்து வருகின்றது.

