கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(28.03.2025) இடப்பெற்றுள்ளது.
தெமட்டகொடையில் அமைந்துள்ள ஒரு காணி விவகாரம் தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளரையும் அவரது மகளையும் மிரட்டிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச அதிகாரிகள் அடங்கிய குழு
அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றுடன் அவர் சென்று மிரட்டல் விடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட கித்சிறி, புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.