முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸாரின் பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் எதிர்வரும் வாரத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) இன்று (17.12.2024) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னர் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
1200 மில்லியன் ரூபா
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கென ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளும் நீக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசாங்கம் இதுவரை செலவிட்ட பணத்தில் சுமார் 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.