முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகனத்தில் பாரியளவு போதைப்பொருள் கடத்திய நால்வர் கைது

முல்லைத்தீவு (Mullaitivu) – புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில்
மறைத்து கொண்டு செல்லப்பட்ட 29 கிலோ கேரளா கஞ்சாவுடன் வாகனத்தின் சாரதி
உள்ளிட்ட நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினர், புதுக்குடியிருப்பு பொலீஸாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விசுவமடு பகுதியில் இருந்து வாகனத்தில் கஞ்சாவினை ஏற்றிக்கொண்டு
புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி பயணிக்கும் போது பொலிஸார் சோதனை
நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

விசாரணை நடவடிக்கை 

கன்டர் வாகனத்தின் பெட்டியின் கீழ் பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா
மறைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவரின் வீடு மோப்ப
நாய்கள் சகிதம் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் அங்கும்
மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாகனத்தில் பாரியளவு போதைப்பொருள் கடத்திய நால்வர் கைது | Four Arrested Smuggling Of Drugs Vehicle

புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் மற்றும் குருநாகல் பகுதியினை
சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக
புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இவர்களை நாளை (01.07.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளார்கள்.
நீண்டகாலமாக முல்லைத்தீவில் இருந்து குருநாகர் பகுதிக்கு கஞ்சா கடத்தி
வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்