கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகள்
இதன்படி, உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பரீட்சை காலத்தின் போது பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.