கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வழக்கறிஞராக மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அணிந்திருந்த கறுப்பு ஐரோப்பிய பாணி உடையை பொலிஸ் சிறப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
இது நீர்கொழும்பு, கொச்சிக்கடை ரிதிவேலி வீதி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலிஸ் சிறப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை
இதேவேளை, கனேமுல்ல சஞ்சீவவின் சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, அவரது உடலை நேற்று பிரேத பரிசோதனை செய்யுமாறு மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள பொலிஸ் பிரேத அறையில் நேற்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.