இலங்கையில் பல விடயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தில் ஒரு படுகொலை இடம்பெற்றுள்ளமையானது நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,
2009ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் அடக்கப்பட்ட பின்னர் இந்த பாதாள உலக குழுவினருடைய கை ஓங்கியது என்று அரசறிவியல் ஆசான் எனப்படும் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
பாதாள உலக குழுக்களை வளர்தெடுத்தவர்கள் ஆட்சியாளர்கள் தான்.
ஆட்சியாளர்களின் கைகருவிகளாக இருக்கும் பாதாள உலக குழுவினருக்கு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல.
ஆட்சியாளர்களுக்கு உதவிய பெரும்பாலான பாதாள உலக குழு தலைவர்கள் ஆட்சியாளர்களாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளது, அதற்கு தலைமை தாங்கியவரே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ” என்றார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..