முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் தகாத
உறவினை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் குடும்பஸ்தர்
ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (16.07.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியினை
சேர்ந்த 15 வயதுடைய சிறுமி வைத்திய சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட
வைத்தியசாலைக்கு சென்றவேளை சட்டவைத்திய அதிகாரியின்
பரிசோதனையில் குறித்த சிறுமி ஆண்களுடன் தகாத உறவு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன்
ஒருவரும், முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான
குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது, முறைப்பாட்டினை ஏற்று நடவடிக்கையினை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார்
சிறுமியுடன் தகாத உறவினை வைத்த காதலனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு
கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.