அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க
ஆபரணங்களை திருடிய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும்
அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து குறித்த நான்கு சந்தேக
நபர்களையும் ரூபா 25 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும்
மீட்டுள்ளனர்.
தங்கம் விற்பனை நிலையம்..
குறித்த சந்தேக நபர்கள் கினியாகல சம்மாந்துறை மத்திய முகாம்
மற்றும் அம்பாறை ஆகிய நான்கு பொலிஸ் பிரிவிலும் இந்த திருட்டுகளை
மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து ஆறு கிராம் ஹெரோயினையும்
பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் அம்பாறை நகரில்
உள்ள ஒரு தங்கம் விற்பனை செய்கின்ற நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
அதேவேளை, தங்க விற்பனை நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.




