கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
2022ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இதன்படி கடந்த சில வாரமாக இதற்கான விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில் குறித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.