கனடாவில் (Canada) வாடகை தொகைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயமானது கனடாவின் முன்னணி வீட்டு மனை தொடர்பான இணையதளங்களில் ஒன்றான ரெண்டல்ஸ் டாட் சிஏ (Rentals.ca) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது முதல் கனடாவில் தொடர்ச்சியாக வாடகை தொகைகள் அதிகரித்து செல்லும் போக்கு காணப்பட்டது.
சராசரி வாடகை
கடந்த 2021 ஆம் ஆண்டு வரையில் சராசரியாக வாடகை தொகை நான்கு தசம் ஆறு ஆக காணப்பட்டது.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் இந்தத் தொகை 12.1 வீதமாக அதிகரித்திருந்ததுடன் 2023 ஆம் ஆண்டிலும் வாடகை தொகை சராசரியாக 8.6 வீதத்தினால் அதிகரித்திருந்தது.
இவ்வாறு, இந்த 2025 ஆம் ஆண்டில் வாடகை தொகைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையல், கூடுதல் அளவில் வாடகை வீடுகள் சந்தையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இதனால் வாடகை தொகைகள் குறைவடையலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.