போக்குவரத்து விதிமீறல் தொடர்பான குற்றங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைக்கு குறித்த செயற்பாடு மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அபராதம் செலுத்தும் செயற்பாடு

எதிர்வரும் டிசம்பர் தொடக்கம் மூலம் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான குற்றங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் செயற்பாடு நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
அதற்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சி செயலமர்வுகள் பொலிஸ் திணைக்களத்தினால் பிரதேசங்கள் தோறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

