முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து வெளியான தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமடைந்துள்ளமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, விடைத்தாள் மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், அது எதிர்காலத்தில் நடைபெறும் பரீட்சைகளையும் பாதிக்கும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ (Priyantha Fernando) வலியுறுத்தியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடு

அத்துடன் விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்படும் தாமதத்தால் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டை மாத்திரமன்றி பாடசாலைக் கற்கைகள் மற்றும் எதிர்காலப் பரீட்சைகளையும் பாதிக்கக் கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து வெளியான தகவல் | Gr 5 Scholarship Exam Evaluations Delay Ctu Warns

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்க முடியவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர (Thilaka Jayasundara) ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்