முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

புதிய சுற்று நிருபத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில்
உள்வாங்கப்பட உள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சையின் போது மாவட்ட
ரீதியில் தேவைக்கு ஏற்ப வெட்டுப் புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இடமாற்றங்கள்

கல்வியில் இடமாற்றங்கள் பூதாகரப் பிரச்சினையாகவுள்ளது. வடமாகாணத்தில்
இடம்பெற்ற வலயங்களுக்கு இடையிலான இடமாற்றத்தில் மடு, வவுனியா வடக்கு, மன்னார்,
துணுக்காய் போன்ற வலயங்களில் இருந்து செல்ல வேண்டிய ஆசிரியர்களில் 99
வீதமானவர்கள் இடமாற்றத்தை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் | Graduate Teachers Appointed Northern Province

அதேவேளை, அந்த
வலயங்களுக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் முழுமையாக வருகை தரவில்லை. மடு வலயத்தில்
29 ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றமாகி சென்றுள்ளார்கள். 4 ஆசிரியர்கள்
மட்டுமே வந்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறிய
நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளும் போது மாகாண கல்வித் திணைககளம் கரிசனையோடு
கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது இடமாற்றம் சிலவற்றில
பிழைகள் இருக்கிறது. தெரிவுகளில் தவறுகள் உள்ளது. எதிர்வரும் காலத்தில்
துல்லியமான தகவல்களைப் பெற்று ஆசிரியர்களுக்கு அநீதி இடம்பெறாத வகையில்
இடமாற்றம் வழங்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் 3517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அரசாங்கத்தின்
சுற்று நிருபம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. அந்த சுற்று நிருபத்தில் பல பிழைகள் உள்ளது. அதில்
மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதனால் பட்டதாரிகளின் வேண்டுகோளுக்கு
இணங்க அந்த சுற்று நிருபம் நிறுத்தப்பட்டுளது.

ஆசிரியர் பற்றாக்குறை

புதிய சுற்று நிருபம்
வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுற்று நிருபத்தில் 1756 ஆசிரியர்கள் வடக்கு
மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். பற்றாக்குறையில் 50 வீதம்
உள்வாங்கப்படவுள்ளார்கள். இதன் மூலம் கணிசமான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க
முடியும். ஆனாலும் அதில் ஒரு தடை உள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் | Graduate Teachers Appointed Northern Province

ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கையும் விரைவாக முடித்து இந்த வருடத்திற்குள் ஆசிரிய நியமனத்தை வழங்க
எண்ணியுள்ளோம். பொதுவான வெட்டுப் புள்ளியை நிறுத்தி மாவட்டத்திற்கு தனித்
தனியான வெட்டுப் புள்ளிகளை வழங்கி மாவட்டத்திற்கு தேவையான ஆசிரியர்களை
உள்வாங்குவதன் மூலம் இடமாற்றப் பிரச்சினையையும் தீர்க்க முடியும்.

இது
தொடர்பில் ஆளுநருடன் பேசியுள்ளோம்.

எம்மைப் பொறுத்தவரை வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
எமது காலத்தில் அதனை ஏனைய மாகாணங்களை போல முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
அதை நோக்கி எமது பயணம் இருக்கிறது. எமக்கு கட்சி பேதம் கிடையாது.

உள்ளூராட்சி மன்றங்களில பல்வேறு கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன. அவை எம்மோடு இணைந்து
பணியாற்றினால் வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியலுக்கு அப்பால்
நாம் செயற்பட தயராகவுள்ளோம் அதற்கு அவர்களது ஒத்துழைப்பையும் கேட்டு
நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.