நடைபெறவுள்ள பொதுதேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை அனைவரும் ஒன்றினைந்து பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கூறியுள்ளார்.
மூதூரில் நேற்று(21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தண்டவாளம் போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அபிவிருத்தியையும் இணைந்த வகையில் அரசியலை முன்னெடுப்பது சிறந்தது.
தமிழ் பிரதிநிதித்துவம்
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த மட்டில் தமிழ் நாட்டில் சுமார் 2000 குடும்பங்களும் கனடா நாட்டில் சுமார் 500 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் பிரதிநிதித்துவம் இம்முறை அதிகமான வாக்களிப்பின் ஊடாக பாதுகாக்க விழிப்புணர்வுகளை இளைஞர்கள் மத்தியில் நடாத்த வேண்டும்.
யாழ். மாவட்டத்தில் ஒரு பிரதிநிதித்துவம் இம்முறை குறைவடைந்துள்ளது. 1827களில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 81 வீதமாக இருந்த தமிழ் மக்கள் தொகை தற்போது 24 வீதமாக குறைவடைந்துள்ளது.
அம்பாறையில் 18 வீதமாக குறைவடைந்துள்ளது எனவே தான் அனைவரும் மனம் தளராமல் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க செய்யவும் இதன் மூலம் தமிழ் தேசியத்தை பாதுகாக்க வாக்களிக்க வேண்டும் என்றார்.