அமெரிக்காவின் மேற்கு வட கரோலினாவில் வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தின் போது
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹிக்கோரி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் இந்த துப்பாக்கிச்
சூட்டு சம்பவம் நடந்தது.
பாதிக்கப்பட்ட 12 பேரில் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள்
குறித்த சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அல்லது வயதுகளை இன்னும் பொலிஸார் வெளியிடவில்லை.

