ஹிக்கடுவை – மாவதகம பகுதியில் உள்ள வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
4 முறை துப்பாக்கிச் சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் சுமார் 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், தோட்டாக்கள் வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.