தாமதமானாலும் கூட நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தாமதமானாலும் நெல்லுக்கான நிர்ணய விலையை தற்போதைய அரசாங்கம் வழங்கியிருப்பது தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நியாமான விலை
இருப்பினும், இது நியாமான விலை அல்ல காரணம் , அன்று அப்போது 120 ரூபாய்க்கு நெல் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதமாகியும் இதே விலை நிர்ணயம் ஏற்றதல்ல.
கடந்த காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலையை விவசாயிகளுக்கு சரியாக வழங்க முடியும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆளும் கட்சி
ஆனால், இன்று அந்த விவசாயிகளை மறந்துவிட்டு இன்று அவர்களின் செலவுகளை நெல்லில் சேர்த்து உள்ளீர்கள் பரவாயில்லை.
விவசாயிகளின் 20 மற்றும் 30 வீதம் நெல் விற்பனையான பிறகு நீங்கள் நிர்ணய விலையை வெளியிட காரணம் என்ன ? இதை கேட்டால், நாங்கள் செய்ததை சரி செய்ய காலம் வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
ஆனால் எதிர் கட்சியில் இருக்கும் போது உங்களால் கேள்விக்கேட்க முடிகின்றது இருப்பினும் ஆளும் கட்சியான பிறகு ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை” என அவர் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.