வலது காலில் தொடை தசைநார் காயம் ஏற்பட்டதால், இலங்கை ரி20 அணித்தலைவர், வனிந்து ஹசரங்க(wanindu hasaranga) வரவிருக்கும் வங்கதேச ரி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் போது துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது காயம் ஏற்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பிற்கு திரும்புகிறார்
மருத்துவ மதிப்பீட்டைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் மையத்தில் தனது சிகிச்சையை தொடங்க ஹசரங்க கொழும்புக்குத் திரும்புவார்.
எனினும் ரி20 அணியில் ஹசரங்கவுக்கு மாற்றாக யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது