இந்திய மாநிலமான கேரளாவில்(kerala) சுகாதார அவசர கால நிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் 60 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜோர்ஜ்(Veena George) கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம்
வைரஸ் தொற்றில் இருந்து விடுபட, நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணியுமாறும் சுகாதாரத் துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.