கம்பஹா – ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வட்டுபிட்டியால வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) பிற்பகல் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் ஹொரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு
பொலிஸார் விசாரணை
ஹொரகொல்ல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்குள் பிரவேசித்த வேளையிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |