சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்’ விருதுக்கான பரிந்துரையில் இலங்கை அணியின் வீரர்களான வனிந்து ஹசரங்க (
Wanindu Hasaranga) மற்றும் குசல் மெண்டிஸூம் (Kusal Mendis) அடங்கியுள்ளனர்.
இவர்களுடன் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை மகளிர் அணியின் வீராங்கனை சமரி அத்தபத்து 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் மற்றும் டி-20 வீரங்கனை விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்
இதேவேளை உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதையடுத்து உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி தகுதிபெற்றுள்ளது.
இந்தநிலையில் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் லார்ட்ஸில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.