முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத உணவகக் கட்டுமானம் அகற்றும் நடவடிக்கை தோல்வியில்..

​திருகோணமலை, பிரட்ரிக் கோட்டையில் உள்ள டச்பே கடற்கரையோரமாக அமைந்திருந்த
சட்டவிரோத உணவகக் கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டுமானங்களை அகற்றுவதற்காக இன்று
(நவம்பர் 04) கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள
அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்காலிகமாக தோல்வியில்
முடிவடைந்துள்ளது.

விகாரை நிர்வாகத்தின் கோரிக்கையினால், மீதமுள்ள கட்டுமானங்களை அகற்றும்
நடவடிக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரட்ரிக் கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயா
வளாகத்திற்குள், அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த இந்த உணவகக்
கட்டிடம் மற்றும் மூன்று கொட்டில்களை அகற்றுவதற்காக இயந்திரங்கள்
வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும்
கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த விகாரையின் விகாராதிபதி, உடைக்கும் நடவடிக்கைக்கு எதிராக
துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன், நடவடிக்கைக்காக
கால அவகாசமும் கோரியிருந்தார்.

கால அவகாசம் 

அத்துடன், குறித்த சட்டவிரோத கட்டுமானம் தொடர்பிலான வழக்கு ஒன்று ஏற்கனவே
மாநகரசபையினால் தொடரப்பட்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பு இதுவரை கிடைக்கப்பெறாத
நிலையிலும் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத உணவகக் கட்டுமானம் அகற்றும் நடவடிக்கை தோல்வியில்.. | Illegal Restaurant Construction Removed Trinco

​இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டவிரோத கட்டுமானத்தில் இருந்த மூன்று
கொட்டில்கள் மட்டுமே இன்று அகற்றப்பட்ட நிலையில், நிரந்தரக் கட்டிடத்தை
அகற்றும் நடவடிக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரையோர பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, ஆரம்பத்தில் 127 சதுர
அடியில் தற்காலிகக் கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே உரிமையாளருக்கு அனுமதி
வழங்கப்பட்டிருந்தது.

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத உணவகக் கட்டுமானம் அகற்றும் நடவடிக்கை தோல்வியில்.. | Illegal Restaurant Construction Removed Trinco

ஆனால், அந்த அனுமதியைப் பயன்படுத்தி, 405 சதுரஅடி பரப்பளவு கொண்ட நிரந்தரக்
கட்டிடம், மூன்று கூடுதல் கொட்டில்கள் மற்றும் நிரந்தர வேலி ஆகியவை அனுமதி
பெறாமல் கட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ​இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுமாறு ஏற்கனவே உரிய முறையில் அறிவித்தல்
கொடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்ட உடைத்தல் கட்டளையானது
12.08.2025 அன்று ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் கட்டளையில், அறிவித்தல்
ஒட்டப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்குள் உரிமையாளர்கள் தாமாகவே அகற்ற
வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் திணைக்களம் அவற்றை உடைத்து அகற்றும்
எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.