பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச்(pakistan) சேர்ந்த பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகள் இந்தியாவில்(india) முடக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி , அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(imran khan) மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
வெளிவரும் தகவல்
சமீபத்தில், பாகிஸ்தான் நடிகர்களான மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேஸா கான், சஜல் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டன.
இந்தியாவில் இருந்து இவர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று முடக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சனலும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.