அதுருகிரிய துப்பாக்கிச்சூடு விவகாரமானது தனக்கு நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளதாக, சம்பவத்தில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளான பாடகி கே. சுஜீவா கருத்து வெளியிட்டுள்ளார்.
எதிர்பாராத நேரத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளான பாடகி கே. சுஜீவா தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
துலானின் கோரிக்கை
இந்நிலையில், அவரது காலில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது மற்றும் வைத்தியசாலை அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரை சந்திக்க அனுமதித்து வருகிறது.
சுஜீவாவின் நலன்விரும்பிகள் தெரிவித்த தகவலின்படி சுஜீவா சம்பவத்தினை பின்வருமாறு விவரித்துள்ளார்.
“துலானை எனக்கு தெரியும். அவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார், அதனை என்னால் மறுக்க முடியவில்லை.
எனது இரண்டு பிள்ளைகளையும் இந்த நிகழ்வுக்கு அழைத்து வரவும் கோரினார்.
ஆனால் நான் அவர்களை அழைத்துச் செல்லவில்லை. அப்படி நடந்தால் அவர்களும் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.
திடீரென துப்பாக்கிச்சூடு
வசந்தவைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தாலும், இந்த நிகழ்வுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்ததில்லை. முதன்முறையாக அவரை சந்தித்தேன்.
காணொளிகளில் என்னைப் பார்த்துள்ளதாகவும் நேரில் பார்த்ததில்லை என்றும் கூறினார்.
இதன்போதே எதிர்பாராத நேரத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. திடீரென என் இடது காலில் துப்பாக்கி சூடு ஏற்பட்டது. காயத்துடன் தரையில் விழுந்து என் காலைப் பிடித்துக் கொண்டு கதறினேன். வசந்த தரையில் இரத்தம் வழிந்து கிடப்பதைப் பார்த்தேன்.
நான் சத்தமிட்டு எங்களை வைத்தியசாலைக்கு கொண்டு போக சொன்னேன். இந்த சம்பவத்தில் நயனா இறந்தார்” என தெரிவித்துள்ளார்.