முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையிலுள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வருடாந்த கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளரும் சர்வதேச இந்து மத பீடச் செயலாளருமான கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை முழுவதும் உள்ள அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமய நூல் பெறும்
பொருட்டு வருடாந்தம் 5,000 ரூபா மட்டும் வழங்கப்படுகின்றது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை

இதனை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பிரேரணையாக கொண்டு
வந்த வேளை அரசியல் மாற்றம் காரணமாக அது கை கூடவில்லை. எனவே ஜனாதிபதி இதனைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Increase In Allowance For Sl Moral School Teachers

பல அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் இது சம்பந்தமாக கலந்துரையாடி 25,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி கொரோனா காலத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கொடுத்திருந்த சீருடைகளும் வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்கான சீருடை வழங்கப்பட வேண்டும். எனவே ஜனாதிபதி
இவ்விடயத்தை கருத்தில் கொள்வார் என்பதில் ஐயமில்லை“ என தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்