சந்தையில் இன்று 400 கிராம் உப்பு பக்கட் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 கிலோகிராம் உப்பு பக்கட்டிற்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் வருடாந்தம் 80,000 மெட்ரிக் டொன் அளவிலான உப்பு பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி
இந்நிலையில், நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
இதனால் 15 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.