இந்திய பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.
மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று (09.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு அதிபர் மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
யாழ். குடாநாட்டின் தீவுகளால் தஞ்சாவூருக்கு ஏற்படப்போகும் ஆபத்து
பதவியேற்பு விழா
இதில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் ஷெரிங், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாவுத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
பதவியேற்பு விழாவுக்காக மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, Seychelles தீவுகளின் துணை அதிபர் Ahmed Afif ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர்.
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்
வெயிலின் தாக்கம்
மோடியின் பதவியேற்பு விழா கர்தவ்யா பாதையில் நடத்தப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தப்படுகிறது.
பகல் நேரம் அதிக வெப்பம் நிலவுவதால், இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் 144 தடை உத்தரவு: உச்சகட்ட பாதுகாப்பில் தலைநகர்
பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |