முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையுடனான உறவு குறித்து இந்தியா வெளிப்படுத்தியுள்ள உறுதிப்பாடு

இலங்கையுடனான உறவை யாராலும் துண்டிக்க முடியாது என்றும், எதிர்காலத்தில் கூட இரண்டு நாடுகளும் ஒன்றாகவே பயணிக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் இரண்டு நாடுகளையும் ஒன்றாக வைத்திருக்கும் முக்கிய பிணைப்புகளில் ஒன்று பௌத்த மதம் என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார். 

எனவே, எதிர்கால நலனுக்காக அனைவரும் சகோதர – சகோதரிகளைப் போல ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

 கண்காட்சித் தொடர் 

துருது பூரணை தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மாளிகாகந்தாவில் உள்ள மகா போதி அக்ரஸ்ரவக விஹாரையில் ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்ற தலைப்பில் ஒரு நடமாடும் கண்காட்சித் தொடரைத் தொடங்கி வைத்த போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

இலங்கையுடனான உறவு குறித்து இந்தியா வெளிப்படுத்தியுள்ள உறுதிப்பாடு | India Says No One Can Break Its With Sri Lanka

இந்த கண்காட்சியில், புத்தரின் வாழ்க்கையிலிருந்து குறிப்பிடத்தக்க அத்தியாயங்களை சித்தரிக்கும் ஓவியங்கள், நவீன இந்திய கலையின் சின்னங்கள், பௌத்தம் மற்றும் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிற மதிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி இந்தியாவின் புதுடில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 2024 மே மாதம் விசாகப் பண்டிகையின் போது இலங்கையில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது.

இலங்கையுடனான உறவு குறித்து இந்தியா வெளிப்படுத்தியுள்ள உறுதிப்பாடு | India Says No One Can Break Its With Sri Lanka

இதனை தொடர்ந்து ஆண்டு ஒவ்வொரு பூரணை நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பௌத்த விஹாரைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளை, துருத்து பூரணைத் தினத்தைக் குறிக்கும் வகையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், “இலங்கைக் கண்கள் மூலம் இந்தியா” என்ற கருப்பொருளில் ஒரு கவர்ச்சிகரமான புகைப்படக் கண்காட்சியை காசாகல ரஜமகா விஹாரையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கண்காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிஹால் கலப்பத்தி மற்றும் அதுல வெலந்தகோட ஆகியோர் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங்குடன் இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.   

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.