முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை சிதறடித்தது நியூஸிலாந்து

இந்தியாவிற்கெதிரான(india) மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புனேயில் நடைபெற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து(new zealand) அணி 113 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி அஸ்வின் மற்றும் வோஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி 259 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

முதல் இனிங்ஸில் நியூஸிலாந்து

அவ்வணி சார்பாக டேவொன் கொன்வே 76,ரசின் ரவீந்ரா 65மற்றும் மிச்செல் சான்ட்னர் 33 ஓட்டங்களை பெற்றனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை சிதறடித்தது நியூஸிலாந்து | India Vs New Zealand 2Nd Test At Pune

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 03, வோஷிங்டன் சுந்தர் 07 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது முதல் இனிங்ஸை விளையாடிய இந்திய அணி, மிச்சல் சான்டரின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியது. அவர் 07 விக்கெட்டுக்களை கைப்பற்ற, இந்திய அணி 159 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

 அச்சுறுத்திய மிச்செல் சான்டர்

103 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி 255 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை சிதறடித்தது நியூஸிலாந்து | India Vs New Zealand 2Nd Test At Pune

பதிலுக்கு 358 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி மீண்டும் மிச்செல் சான்டரின் சுழலில் சிக்கி 245 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 113 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்