டுபாயில் சற்றுமுன்னர் முடிவடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இந்திய அணி ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
சோபிக்கத் தவறிய பின்வரிசை வீரர்கள்
அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பர்கான் 57,பக்கார் சமன்46,இருவரும் அதிகூடிய ஓட்டங்களை பெற்றபோதிலும் பின்னர் வந்த வீரர்கள் சோபிக்க தவறினர்.
பந்துவீச்சில் குல்தீவ் யாதவ் 04, பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் பட்டேல் மூவரும் தலா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பலமான துடுப்பாட்ட வரிசை
பதிலுக்கு 147 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 05 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்று 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
அவ்வணி சார்பாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69, சிவம் துபே 33, சஞ்சு சாம்சன்24 ஓட்டங்களை பெற்றனர்.