முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துப்பாக்கியால் சுடப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்: இலங்கை அரசாங்கத்தின் விளக்கம்

இந்திய (india) கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை ஒரு விபத்தாக இடம்பெற்றது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் காரைக்காலை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள நிலையில், இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் காரைக்கால் கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் வைத்து 13 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது.

இந்தியாவின் கண்டனம் 

இதனை தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள பதில் இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்: இலங்கை அரசாங்கத்தின் விளக்கம் | Indian Fishermen Injured Issue Sl Gov Explained

அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்திற் கொண்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக கையாள வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் நிலையில், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளத் தக்க விடயமல்ல என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்: இலங்கை அரசாங்கத்தின் விளக்கம் | Indian Fishermen Injured Issue Sl Gov Explained

அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை எனவும் அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்திய அரசின் கண்டனத்துக்கு விளக்கமளித்துள்ள இலங்கை அரசாங்கம், குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு விபத்து, இதில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படையினரே முதலுதவி செய்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.