முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: ஸ்டாலினுக்கு கொடுத்த பதிலடி!

இந்திய(India) கடற்றொழிளாளர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலில்
ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுது போக்கிற்காகவா கடற்றொழிலில்
ஈடுபடுகின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின்
சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதி மகேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மாளினத்தின் அலுவலகத்தில்
இன்றையதினம்(11.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தங்களுடைய கடற்றொழிளாளர்கள் வாழ்வாதார நோக்கத்திற்காக எங்களுடைய கடல் எல்லைக்குள்
வந்ததாகவும், அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்திய கடற்றொழிளாளர்

ஏறக்குறைய 30 வருடங்களாக, இந்திய கடற்றொழிளாளர்களை கைது செய்வதும் விடுவதும் தொடர்கதையாக காணப்படுகின்றது.

அவர்கள் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு வந்தால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக
கடலுக்கு செல்வதில்லை. நாங்களும் வாழ்வாதாரத்திற்காக தான் கடல் தொழிலுக்கு
செல்கின்றோம்.

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: ஸ்டாலினுக்கு கொடுத்த பதிலடி! | Indian Fishermen Issues Statement To Mk Stalin

இந்தியா இழுவைப் படகின் அட்டகாசத்தினால் நாங்கள் நமது கடலில்
தொழில் செய்ய முடியவில்லை. தமிழக முதலமைச்சரே எமது மக்களின் வாழ்வுரிமையையும்
பற்றி சற்று நீங்கள் சிந்தியுங்கள்.

உங்களுடைய கடற்பகுதியில் பாகிஸ்தான் கடற்றொழிளாளர்களோ அல்லது சீன கடற்றொழிளாளர்களோ வந்து
கடற்றொழிலில் ஈடுபட்டால் அவர்களை வாழ்வாதார அடிப்படையிலேயோ அல்லது மனிதாபிமான
அடிப்படையிலேயோ நீங்கள் விடுதலை செய்வீர்களா? நிச்சயம் நீங்கள் அவர்களை கைது
செய்வீர்கள் இன்றைக்கும் உங்கள் எல்லையில் நீங்கள் சண்டை செய்து கொண்டுதான்
இருக்கின்றீர்கள். அதுபோல எங்களது எல்லைக்குள் நீங்கள் வரவேண்டாம்.

எங்களது வளங்களை சுரண்டிக்கொண்டு, வாழ்வாதாரம் மனிதாபிமானம் என்று பொய்களை
கூறிக்கொண்டு எங்களது மக்களை நிர்க்கதியாக்குகின்றீர்கள். 

எனவே உங்களது கடற்படையினை வைத்து உங்களுடைய கடற்றொழிளாளர்களை எல்லை தாண்ட விடாது
கட்டுப்படுத்துங்கள் எங்களது வளங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.