இலங்கையில் தவறான முடிவெடுத்த நிலையில், இந்திய பிரஜையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்த இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு சடலமாக இன்று(11) மீட்கப்பட்டுள்ளார்.
36 வயதுடைய குறித்த இந்திய பிரஜை, சீதுவ, லியனகேமுல்லவில் உள்ள வீட்டுத் தொகுதியில் தங்கியிருந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், அவர் தங்குமிடத்தில் தவறான முடிவெடுத்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.