இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளில், இந்திய
ஆசிரியர்களைப் பணியமர்த்தும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஆதரிக்கும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(10.03.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நான், முன்னர் அமைச்சராக
இருந்த காலத்தில், பெருந்தோட்டத் துறையில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு,
இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை, வரவழைக்கும் திட்டத்தை முன்மொழிந்தேன்.
இருப்பினும், இந்த யோசனையை அப்போது, ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியே
எதிர்த்தது. தமது திட்டத்தை முதலில் எதிர்த்த ஜேவிபி, இன்று, அரசாங்கமாக, அதனை
செயற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
அத்துடன், ஆசிரியர் வெற்றிடங்கள், பெருந்தோட்டத் துறை மாணவர்கள், தங்கள் உயர்தரத்
தேர்வுகள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் நுழைவது போன்ற உயர்கல்வி
வாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதை கடுமையாகப் பாதித்து வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,