முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச யோகா தினத்தை கொண்டாட திருகோணமலைக்கு வந்த இந்திய போர்க்கப்பல்

Courtesy: Sivaa Mayuri

10ஆவது சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில், இந்திய உயர் ஸ்தானிகரகம் மற்றும் அதன் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையம் ஆகியன திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ,இந்திய நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பலான கமோர்டா  மற்றும் அதனுடன் இணைந்த இடத்தில் யோகா நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்திய கடற்படையினால், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் கமோர்டா நேற்று (20.06.2024) திருகோணமலையை வந்தடைந்தது.

தொழில்முறை தொடர்புகள்

இந்தநிலையில் இன்று கப்பலில் இடம்பெற்ற யோகா நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட்ட இலங்கை படையினரும் கலந்துகொண்டனர்

இதன்போது குறித்த கப்பலை பார்வையிடுவதற்கு, பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையுடன் பல்வேறு தொழில்முறை தொடர்புகளை மேற்கொள்ளுவதோடு, ஜூன் 23ஆம் திகதியன்று கப்பல் புறப்படும் போது, திருகோணமலையில் இருந்து இலங்கை கடற்படை கப்பலுடன் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2023 சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்காக இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடந்த ஆண்டு கொழும்புக்கு வந்திருந்தது.

சர்வதேச யோகா தினத்தை கொண்டாட திருகோணமலைக்கு வந்த இந்திய போர்க்கப்பல் | Indian Warship Arrived At Trincomalee

இவ்வாறு இலங்கைக்கான இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகைகள், இந்தியாவின் ‘அண்டை நாடுகளின் முதல்’ கொள்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளன.

அத்துடன் இரண்டு அண்டை நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.