காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கழிவுநீரில் வைரஸ் இருப்பதும், குடிநீரின் பற்றாக்குறையும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இதன்படி, இஸ்ரேலின் (Israel) தாக்குதலை நிறுத்தவும், கழிவுநீர் அமைப்பை சீர் செய்யவும், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிரம்பிய முகாம்களுக்கு குடிநீரை வழங்கவும் இஸ்ரேலுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
எனினும், காசா நகரின் ஜெய்டவுன் பகுதியில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நடத்த வந்த பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.