கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய
பகுதியில் கடந்த 31ஆம் திகதி (31.05.2025) மாலையில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த ஒருவரை இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்கான
இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய கந்தசாமி பிரணவன் எனும் பூநகரி செம்பங்குன்று
பகுதியைச் சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறப்பதற்கு முன்
இந்நிலையில் குறித்த இளைஞன் இறப்பதற்கு முன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒரு மரண வாக்குமூலத்தை வழங்கியு்ளார்.

அதில் தன்னை வாள்வெட்டுக்கு உள்ளாக்கிய நபர் தொடர்பான விடயங்களை வழங்கியுள்ளார்.

