Courtesy: Sivaa Mayuri
2023ஆம் ஆண்டில் இலங்கையின் டிஜிட்டல் கல்வியறிவு 63.5 வீதமாக அதிகரித்துள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் 5 முதல் 69 வயதுக்குட்பட்ட ஐந்தில் மூன்று பேர் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் 5 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்திய பாப்பரசரின் கருத்து
வேலையற்ற சமூகம்
இதன்படி, 2006 – 2007 காலப்பகுதியில் 16.1வீதமாக இருந்த இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் 2023இல் 39 வீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் ஆண்களின் கணினி கல்வியறிவு வீதம் 40.9வீதமாகவும், பெண்களின் கணினி கல்வியறிவு விகிதம் 2023 இல் 37.2வீதமாகவும் உள்ளது மேலும், கணினி கல்வியறிவு விகிதம் 15 – 19 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்த வயதினரின் கணினி கல்வியறிவு விகிதம் 79 வீதமாகவும், 20 – 24 வயதிற்குட்பட்டவர்களில் 74.7வீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்ற மக்களிடையே கணினி கல்வியறிவு 72.4வீதமாகவும், வேலையற்ற சமூகத்தில் கணினி கல்வியறிவு 70.3வீதமாகவும் இருப்பதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வேலையற்றவர்களில், பலருக்கு குறைந்தபட்சம் சில தொழில்நுட்ப திறன்கள் இருப்பதாக முடிவுகள் மேலும் வெளிப்படுத்தியுள்ளன என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்ந்த மட்டம்
மாகாணங்களின் கணினி கல்வியறிவின் அடிப்படையில் மிக உயர்ந்த மட்டம் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது,டன் இது 49.9வீதமாகும்.
ஊவா மாகாணத்தில் 26.5 வீதமாக குறைந்த கணினி கல்வியறிவு பதிவாகியுள்ளது.
5 முதல் 69 வயதுக்குட்பட்ட ஒருவர் கணினியை சொந்தமாகப் பயன்படுத்தினால் கணினி அறிவு பெற்றவராகக் கருதப்படுகிறார்.
உதாரணமாக, 05 வயதுடைய குழந்தை கணினி விளையாட்டை விளையாட முடிந்தாலும், அவர் கணினி அறிவு பெற்றவராகக் கருதப்படுவார் என குறித்த திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், கணினி, லேப்டாப், டேப்லெட் அல்லது ஸ்மார்ட்ஃபோனை சொந்தமாகப் பயன்படுத்தினால் அவர் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவராகக் கருதப்படுவார்.
நாட்டில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை
கொழும்பில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |