அத்துருகிரியவில் அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த இறக்கும் போது நாடு முழுவதும் கடனாளியாக இருந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை நடத்தும் காணொளிகள் பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக வைரலாகிய போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரது தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் அவர் பாரியளவில் கடன்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு எச்சரிக்கை
மேலும், பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் ஊடகங்கள் முன்பாக கேள்வி எழுப்பிய டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவரைத் தவிர ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேல்மாகாண, தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு தவறு இடம்பெறாமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.