சர்வதேச ரீதியாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளக்கூடிய வங்கி அட்டை ஒன்றின் ஊடாக சுமார் ஐந்து கோடி ரூபா மோசடி செய்த சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாத்தளைப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க வங்கிக் கிளையொன்றில் சர்வதேச ரீதியாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளக் கூடிய ஏ.டி.எம். அட்டையொன்றைப் பயன்படுத்தி நான்கு கோடியே 80 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா மோசடியாக மீளப் பெறப்பட்டுள்ளது.
மீளப்பெறப்பட்ட பணம்
38 நாட்களுக்குள் 387 தடவைகளில் குறித்த பணத் தொகை மீளப்பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துபாயில் இருந்து இலங்கைக்கு விடுமுறையில் வருகை தந்திருந்த 21 வயதான இளைஞர் ஒருவரே குறித்த வங்கி அட்டையை எடுத்து வந்து முதலில் இரண்டு கோடி ரூபாய் மோசடியாக மீளப் பெற்றுள்ளார்.

அதன் பின் அவர் மீண்டும் வெளிநாடு செல்லும்போது தனது நண்பர் ஒருவரிடம் அதனைக் கையளித்துள்ளார்.
குறித்த நண்பரும் இன்னொரு பெண்ணும் இணைந்து இரண்டு கோடியே எண்பது இலட்சத்து 84 ஆயிரம் ரூபாவை மோசடியாக மீளப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

