முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இளம் சமூதாயத்தை அடிமையாக்கும் நவீன போதைப்பொருள்!

இன்றைய காலத்தில் வளர்ந்து வரும் குழந்தைகள் முதல் இளைய சமூகத்தினர் வரை அதிகமாக அடிமையாகும் ஒரு போதைப்பொருளாக நவீன கையடக்க தொலைபேசி மாறிவருகின்றது என மனநல மருத்துவர்களின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இளைஞர்கள் தொலைபேசியில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என்றும் இத்தகைய அடிமைத்தனம் மனநலத்திற்கு தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சில ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.

நவீன கையடக்க தொலைபேசியின் தாக்கம்

தற்போது சிறு குழந்தைகள் முதல் இளைய சமூகத்தினர் வரை அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறியாத அளவிற்கு நவீன கையடக்க தொலைபேசியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொலைபேசிக்கு அடிமையானவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடனும் தொடர்பற்ற நிலையில் இருப்பார்கள்.

இளம் சமூதாயத்தை அடிமையாக்கும் நவீன போதைப்பொருள்! | Internet Addiction Of Teenage Reasons And Impacts

இதற்கு ஒரு முக்கிய காரணமாக தற்போதைய நவீன தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு அதி நவீன கையடக்க தொலைபேசி இருந்தால் இந்த உலகின் எந்த மூலையிலும் நடக்கும் சிறு விடயங்களை கூட நம்மால் அறிந்துகொள்ள முடியும். இப்படி உலக அறிவையும் பொது அறிவையும் பெறுவதற்கென மாணவர்களின் கைகளில் குடிபுகுந்த தொலைபேசி இன்று அவர்களை நிஜ உலகிலிருந்து காணாமலாக்கிவிட்டது என்றால் அது மிகையாகாது.

கல்வி சார்ந்த அனைத்து விடயங்களையும் தொலைபேசி ஊடாகவே மாணவர்கள் தற்போது கற்றுக்கொள்கின்றனர். எந்த ஒரு விடயத்திலும் அவர்களின் முயற்சியால் வெற்றி பெறுவதற்கு அப்பால் தொழில்நுட்பத்தின் அறிவை பயன்படுத்தி தம்மை சிறந்தவர்களாக வெளிக்காட்ட எத்தனிக்கின்றனர்.

அடிமைத்தனம் 

கல்வி சார்ந்த விடயங்களை கற்றல் என்ற பெயரில் புதிய விடயங்களை தேடி படிக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் அவர்களை நல்வழிப்படுத்துகின்றனவா என்ற ஒரு கேள்வி எழும்புகின்றது.

காரணம் சிலர் சமூக ஊடகங்கள், video game விளையாடுவது போன்ற தவறான பழக்க வழக்கங்களை கற்று எதிர்மறையான விடயங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

இவ்வாறு தொலைபேசிக்கு அடிமையானவர்கள் மிக மோசமான நிலையில வாழ்வதாக doomscrolling பற்றிய ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இளம் சமூதாயத்தை அடிமையாக்கும் நவீன போதைப்பொருள்! | Internet Addiction Of Teenage Reasons And Impacts

அதாவது எதிர்மறையான செய்திகளை தெரிந்துகொள்வதற்காக ஒருவர் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுவது டூம்ஸ்க்ராலிங்(doomscrolling) என கூறுகின்றனர்.

இந்நிலைக்கு உட்பட்டவர்கள் தொலைபேசியை பயன்படுத்த கூடாது என்று அவர்களே நினைத்தாலும் கூட அதனை செய்ய இயலாத அளவிற்கு, தாம் என்ன செய்கின்றோம் என்பதை அவர்களே அறியாத அளவிற்கு தொலைபேசிக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(Artificial Intelligence) போன்ற கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை பயன்படுத்தி தனிநபர் பற்றிய தவறான சித்தரிப்புகளை உருவாக்குதல், செம்மையாக்கல் தொழிநுட்பங்கள் ஊடாக பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தல், தொழிநுட்ப அறிவினை பயன்படுத்தி தனிநபர் தரவுகளை பெற்று இணைய குற்றங்களில் ஈடுபடல் போன்ற பல எதிர்மறையான விடயங்களை கற்றுக்கொள்ளல்.

ஆய்வுகள்

இது தொடர்பில் லண்டனின் கிங்ஸ் கல்லூரி, “சிக்கல் நிறைந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு” என்ற தலைப்பில் 42,000 இளைஞர்களை உள்ளடக்கிய 41 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வுகள் ஊடாக, 23 சதவீதமானோர் போதைப்பழக்கத்துடன் ஒத்துப்போகும் நடத்தையைக் கொண்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய அடிமைத்தனமான நடத்தைக்கு உட்பட்டவர்களுக்கு தொலைபேசி அணுகல் மறுக்கப்பட்டால் அவர்கள் ஒருவிதமான பயத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர்களின் உடல் மற்றும் மனநிலை அசாதாரணமானதாக மாறும் நிலையும் ஏற்படலாம் எனவும் கண்டறிந்துள்ளனர்.

இளம் சமூதாயத்தை அடிமையாக்கும் நவீன போதைப்பொருள்! | Internet Addiction Of Teenage Reasons And Impacts

அதாவது, தங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியவில்லையே என்ற கவலை அவர்களை ஆட்கொண்டு வேறு எந்த விடயத்திலும் கவனம் செலுத்த இயலாத அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு முக்கியமான விடயமாக பார்க்கப்படுவது குழந்தை பருவத்திலிருந்தே தொலைபேசிக்கு அடிமையாகும் நிலை.

பெற்றோரின் கவன குறைவு 

சில பெற்றோர்கள் தமது குழந்தைகளை கட்டுப்படுத்துவதற்காக அவர்களின் கையில் தொலைபேசியை கொடுக்கின்றனர்.

இதனால் காலப்போக்கில் குழந்தைகள் தொலைபேசிக்கு அடிமையாகி நிஜ வாழ்க்கையில் தமது உறவுகளுடனான தொடர்பை துண்டித்துக்கொள்கின்றனர். அதிகமாக தனிமையை விரும்புவார்கள்,கல்வி கற்பதில் ஆர்வம் இருக்காது, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடையாக அமைவதுடன் உரிய நேரத்திற்கு உணவருந்தாமல், நித்திரை இன்றி தொலைபேசி உலகில் மூழ்கி விடுவார்கள்.

இளம் சமூதாயத்தை அடிமையாக்கும் நவீன போதைப்பொருள்! | Internet Addiction Of Teenage Reasons And Impacts

இது தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ள, 12 மற்றும் 13 வயதுடைய 10,000 குடும்பங்களை உள்ளடக்கிய national Adolescent Brain Cognitive Development (ABCD) என்ற ஆய்வு தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வினூடாக 72.9 சதவீத பெற்றோர்கள் அவர்களின் குழந்தைங்களுடன் நேரம் செலவழிப்பதை தவிர்த்து அவர்களின் முன்னால் அதிகமா தொலைபேசியை பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி பெற்றோர் செய்யும் செயல்களை குழந்தைகள் கவனிப்பதில்லை என்று அனைத்து பெற்றோரும் நினைப்பதாகவும் ஆனால் பெற்றோர் செய்யும் அனைத்து செயல்களையும் குழந்தைகள் அப்படியே பிரதிபலிப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் சமூதாயத்தை அடிமையாக்கும் நவீன போதைப்பொருள்! | Internet Addiction Of Teenage Reasons And Impacts

இதனடிப்படையில், சீனாவில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் சிறுவர்களுக்கான தொலைபேசி பயன்படுத்தும் நேரத்தை தினசரி இரண்டு மணி நேரமாக அறிவித்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் இவ்வாறான சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதேவேளை சமீபத்தில் இலங்கை அரசாங்கமும் குறிப்பிட்ட வயதெல்லைக்கு உட்பட்ட சிறுவர்களின் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்திருந்தது.

வழிமுறைகள்

இவ்வாறு பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் தொலைபேசிக்கு அடிமையாகும் நிலையை தவிர்ப்பதற்கும், தொலைபேசி பயன்பாட்டிலிருந்து தமது குழந்தைகளை விடுவிப்பதற்கு ஆய்வாளர்கள் சில வழிமுறைகளை முன்வைத்துள்ளனர்.


தொலைபேசியை பயன்படுத்தவும் doomscrolling செய்யவும் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை கண்காணித்து அவற்றை குறைக்க வேறு பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.


காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை முக்கியமான நேரங்களில் scrollable apps பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும்.


நேர்மறை எண்ணங்களை தரக்கூடிய பதிவுகளை பார்க்குமாறும் தொடர்ந்து எதிர்மறையான உள்ளடக்கத்தை பகிரும் சமூக ஊடக பக்கங்களை Unfollow செய்யுமாறும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


நிஜ உலகில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள், இயற்கையை இரசியுங்கள், பயணப்படுங்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தினமும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உங்களுடைய நாள் எவ்வாறு இருந்தது என்பது குறித்து கலந்துரையாட வேண்டும்.


இணைய வசதி இல்லாத இடங்களில் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல், நேரத்தை செலவழித்தல் போன்ற விடயங்கள் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

குறிப்பாக படுக்கையறை மற்றும் சாப்பாட்டு அறையில் தொலைபேசி பயன்பாட்டை குறைக்குமாறும் சமூக ஊடக பயன்பாடு மற்றும் அதிகமான தொலைபேசி பாவனையின் எதிர்மறையான தாக்கங்கள் பற்றி உங்களுடைய குழந்தைங்களுடன் கலந்துரையாடுமாறும் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.