குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையொன்றை படைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி அரங்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இடம்பெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி களத்தடுப்பை தீர்மானித்தது.
நடராஜனுக்கு தங்க சங்கிலி வழங்கியுள்ள ஐதராபாத் அணி: வைரலாகும் புகைப்படம்
குஜராத் டைட்டன்ஸ் அணி
முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி அணியில் அக்சர் படேல் 66 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித்தலைவர் ரிஷப் பந்த் 88 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதே நேரத்தில் கடைசியில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்தில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என மொத்தம் 26 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்லாயிரங்கோடி மதிப்பிலான மிகப்பெரிய இரத்தினக்கல்
மோசமான சாதனை
குஜராத் அணி தரப்பில், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் குஜராத் அணி சார்பில் பந்து வீசிய மோஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ஓட்டங்களை கொடுத்தார்.
இதுவே ஐபிஎல் பந்துவீச்சாளர் வரலாற்றில் அதிகமாக கொடுக்கப்பட்ட ஓட்டங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |