முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐபிஎல் மெகா ஏலம் 2025: பிசிசிஐ வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ தகவல்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் பிரதான நகரமான ஜெட்டாவில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் 

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்று மற்றும் நான்காவது நாட்கள் நடைபெறும் அதே நேரத்தில் இந்த மெகா ஏலம் நடக்க உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் 2025: பிசிசிஐ வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ தகவல் | Ipl 2025 Auction Date And Venue Players Count Bcci

இதனால் இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த உடன் மதிய நேரத்தில் இந்திய நேரப்படி மெகா ஏலத்தை தொடக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்காத வீரர்களுக்கு அடுத்த மினி ஏலத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1574 வீரர்கள் பதிவு

இதனால் 1574 வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்துள்ள நிவையில் இதில் 1165 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களும் 409 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் ஆவர்.

ஐபிஎல் மெகா ஏலம் 2025: பிசிசிஐ வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ தகவல் | Ipl 2025 Auction Date And Venue Players Count Bcci

இத்தாலி, கனடா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எல்லாம் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மொத்தமாக 204 வீரர்களுக்கான தேர்வு இந்த மெகா ஏலத்தில் நடைபெற உள்ளதுடன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

சிஎஸ்கே அணி

மெகா ஏலத்திற்கு முன்பு பத்து அணிகளும் சேர்த்து இதுவரை 46 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணியில் ஹென்றிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கும், விராட் கோலி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தலா 21 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஐபிஎல் மெகா ஏலம் 2025: பிசிசிஐ வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ தகவல் | Ipl 2025 Auction Date And Venue Players Count Bcci

பஞ்சாப், கொல்கத்தா, ஆர்சிபி நடப்பு சாம்பியன் கே கே ஆர், டெல்லி ஆகிய ஐந்து அணிகள் தங்களுடைய அணித்தலைரை விடுவித்து இருப்பதால் இந்த மெகா ஏலத்தில் புதிய அணித்தலைவர் தேர்ந்தெடுக்க இருக்கின்றார்கள்.

இந்த மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்,ஸ்ரேயஸ், கே எல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் அதிக அளவுக்கு விற்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி ஐபிஎல் 2025 ல் விளையாடுவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவரை சிஎஸ்கே அணி 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.