முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தீவிரமடையும் இஷாரா செவ்வந்தி கைது விவகாரம்: வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்

கெஹல்பத்தர பத்மே ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், அளுத்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்லும் திட்டத்தின் பின்னணியில் இஷாரா செவ்வந்தி செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சஞ்சீவவின் கொலைக்கு இஷாரா எந்த பணத்தையும் பெறவில்லை எனவும், மேலும் ஐரோப்பிய நாட்டிற்குச் செல்வது தான் ஒரே கனவு என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கெஹல்பத்தர பத்மே ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார் என்பதுடன், சஞ்சீவவின் கொலைக்கான திட்டமிடுபவராக அவர் செயல்பட்டிருந்தார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்திக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, ஜே.கே. பாய் என்ற நபருக்கு பத்மே ரூ. 6.5 மில்லியன் கொடுத்து, போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

தீவிரமடையும் இஷாரா செவ்வந்தி கைது விவகாரம்: வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல் | Isara Sewanthi Arrested Cid Investigation

கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் விற்பனை

சஞ்சீவவின் கொலைக்கு பத்மேவிடம் இருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை என்றும், நேபாளத்தில் வசிக்க மாத்திரம் அவர் மாதந்தோறும் பணத்தை அனுப்பியதாகவும் இஷாரா விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் இஷாரா செவ்வந்தி கைது விவகாரம்: வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல் | Isara Sewanthi Arrested Cid Investigation    

கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் விற்பனையில் சிறு வயதிலிருந்தே செயற்பட்டு வருவதாகவும், தனது கனவைப் பற்றி அறிந்த கெஹல்பத்தர பத்மே “நான் உன்னை ஐரோப்பாவில் உள்ள ஒரு நல்ல நாட்டிற்கு அனுப்புவேன் என்றும் பத்மே இஷாராவிடம் கூறியுள்ளார்.

தனது கனவை நனவாக்குவதாக உறுதியளித்த பின்னர், சஞ்சீவ கொலைத் திட்டத்திற்கு பத்மே இஷாராவின் ஆதரவைப் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஷாரா செவ்வந்தி உட்பட நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் 90 நாட்கள் விசாரணைக்காக காவலில் வைக்க பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

தீவிரமடையும் இஷாரா செவ்வந்தி கைது விவகாரம்: வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல் | Isara Sewanthi Arrested Cid Investigation   

இதற்கிடையில், இஷாரவிற்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் மத்துகம பகுதியில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய பெண், கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணை நடத்தப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.