நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவல்கள் வெளிவரலாம் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரியைச் சேர்ந்த தக்சி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிக்கும் பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற்று அவரது பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களில், இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட அதிரடிப்படையினரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் நேபாளம் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஏனைய சந்தேகநபர்களை அழைத்து வர ஏற்கனவே இலங்கை விமானம் ஒன்று தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபோன்ற முக்கியச் செயதிகளுடன் வருகிறது லங்காசிறியின் செய்திகளின் தொகுப்பு,

