இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் நேற்று முடிவடைந்தது.
இதனால், காசாவில் (Gaza) மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19-ம் திகதி தொடங்கிய இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம், 33 இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் பணயக்கைதி
அதற்கு பதிலாக இஸ்ரேல் சுமார் 19,000 பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
இந்நிலையில், தற்போது முக்கியமான இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் எகிப்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அறிவித்த ஒப்பந்தத்தின்படி, இரண்டாம் கட்டத்தில் ஆண் வீரர்கள் உட்பட உயிருடன் இருக்கும் அனைத்து இஸ்ரேல் பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
இஸ்ரேல் படைகள்
மேலும், இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்பதுடன், மூன்றாம் கட்டத்தில், காசாவில் பெரிய அளவிலான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் தற்போதைய நிலைப்பாடு:- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக எகிப்துக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியுள்ளார்.
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இரண்டாம் கட்டத்திற்கு செல்வதை விட, தற்போதைய கட்டத்தை நீட்டிப்பதன் மூலம் கூடுதல் பிணைக் கைதிகளை விடுவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
היקירים שלנו כבולים בשלשלאות, מורעבים במנהרות, עוברים עינויי גוף ונפש.
את כולם בפעימה אחת!
שער בגין, עכשיו. pic.twitter.com/xNBWMJ2lde
— כולנו חטופים (@Kulanu_Hatufim) March 1, 2025
ஹமாஸின் தற்போதைய நிலைப்பாடு:- ஹமாஸ் முதல் கட்டத்தை நீட்டிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸின் கருத்தை நிராகரித்துள்ளது.
இரண்டாம் கட்டத்தில் அனைத்து பிணைக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
you may like this
https://www.youtube.com/embed/WxTI25tyVz8