முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழிலாளர் பிரச்சினைகளை மறந்து ஸ்டாலினுடன் செல்ஃபி மோகம் : தமிழ் எம்.பிகள் மீது சுமத்தப்படும் குற்றம்

இலங்கை (Sri Lanka) கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலினுடன் (M K Stalin) சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம் (13.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா (India) – தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan ), இ.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  (M. A. Sumanthiran) ஆகியோர் நேற்றையதினம் (12.01.02025) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

கடற்றொழிலாளர்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் “இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்ந்தும் தொடர்கதையாகவே உள்ளது.

கடற்றொழிலாளர் பிரச்சினைகளை மறந்து ஸ்டாலினுடன் செல்ஃபி மோகம் : தமிழ் எம்.பிகள் மீது சுமத்தப்படும் குற்றம் | Jaffna District Fishermen S Media Meeting

இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகள் மற்றும் தொழில் முதல்கள் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்தப்படுகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கருத்து பிழையானது என்றுகூட அவர்கள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டவில்லை.

இந்திய முதலமைச்சர் 

கடந்த வருடம் நடுப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சீறுவாணம் விட்டதுபோல, இந்திய இழுவைமடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நோக்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடற்றொழிலாளர் பிரச்சினைகளை மறந்து ஸ்டாலினுடன் செல்ஃபி மோகம் : தமிழ் எம்.பிகள் மீது சுமத்தப்படும் குற்றம் | Jaffna District Fishermen S Media Meeting

மக்களுக்காக இந்த போராட்டத்தை செய்கின்றார்கள், இது வரவேற்கத்தக்க விடயம் என்று அப்போது நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால் நேற்று முதலமைச்சருடன் அவர்கள் சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்ததை பார்க்கும்போது, இலங்கை  கடற்றொழிலாளர்கள் விடயம் நினைவில் கூட இல்லை என்பது போலதான் எமக்கு தெரிகிறது. என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.