முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்!

புதிய இணைப்பு

நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் காங்கேசன்துறைக்கு புறப்பட்ட சிவகங்கை கப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை (KKS) வந்தடைந்ததாக எமது செய்தியாளார் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா (India) – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது.

இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது.

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்! | Jaffna Kks To India Chennai Ferry Service Started

சிவகங்கை கப்பல் போக்குவரத்து

இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று துவங்கும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது.

3 மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேஷன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கியதால், இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இந்த கப்பலானது இன்று பி.ப 1.30 மணிக்கு மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன் இந்த கப்பல் சேவையானது செவ்வாய் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் இடம்பெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் புகைப்படம் : பு.கஜிந்தன் 

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்! | Jaffna Kks To India Chennai Ferry Service Started

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்! | Jaffna Kks To India Chennai Ferry Service Started

முதலாம் இணைப்பு

இந்தியா (India) – நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 83  பயணிகளுடன்  யாழ். காங்கேசன்துறைக்கு (Jaffna KKS) சிவகங்கை கப்பல் புறப்பட்டு உள்ளது.

குறித்த கப்பல் சேவையானது 3 மாதங்களுக்கு பின்னர் இன்று (22.2.2025) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது.

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்! | Jaffna Kks To India Chennai Ferry Service Started

இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து இன்று கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், நாகை பயணியர் முனையத்திற்கு அதிகாலை முதல் வரத் துவங்கினர்.

அதனைத் தொடர்ந்து நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்த 83 பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, குடிவரவு அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

மும்மத பிரார்த்தனை

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்! | Jaffna Kks To India Chennai Ferry Service Started

அதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து துவக்கப்பட்டது.

இதில் பயணம் செய்யும், பயணியர் மகிழ்ச்சியுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேசன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர்.

3 மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கியதால் இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்திகள் – கஜிந்தன்

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்! | Jaffna Kks To India Chennai Ferry Service Started

You May like this

https://www.youtube.com/embed/JfAaC62oV3ghttps://www.youtube.com/embed/tCI9GesrEtU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்