மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்தி இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மாணவர்கள் அனைவரும் இன்று (25) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பேரவையின் கூடுதல் கவனம்
மேலும், கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுகள் மற்றும் மாணவர்கள் பழிவாங்கப்படுதல்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவை தனது கூடுதல் கவனத்தை வரும் காலத்தில் செலுத்தும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது பேரவை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக,
1.விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை
உடன் நிறுத்து.
2. போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின்
அடிப்படை உரிமைகளை உறுதி செய்.
3. விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்.
4. மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து – மாணவர்களிற்கு உடனடி
நிவாரணம் வழங்கு.
உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை
உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வாறனதொரு பின்னணியில், அந்த பிரச்சினைகள் குறித்த தீர்வு வழங்குவதாக தெரிவித்து போராட்டத்தை நிறுத்திய யாழ்ப்பாண பல்கலைக்கழக
பேரவையினர்தற்போது மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாக பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மாணவர்களை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.